Some quotes which i Inspired

Film as dream, film as music. No art passes our conscience in the way film does, and goes directly to our feelings, deep down into the dark rooms of our souls.

- Ingmar Bergman



Friday 24 December 2010

15ம் கேரளா சர்வதேச திரைப்பட விழா (IFFK)


சினிமாவை ஆழ்த்து ரசிக்கும் ரசிகணா நீங்கள்,உலக சினிமாவை அதற்கேற்ப ரசிகர்களுடன் பார்க்க ஆசையா..?
நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பாட விழா,சினிமாவை நேசிப்பவர்கள் சங்கமிக்கும் இடம்,ஒரு படம் பார்க்க திரையரங்க வாசலில் காத்து இருந்து,அடித்து புடித்து சினிமா பார்க்கும் சுகமே தனி,இது சில நாள் என்னை விட்டு பிரிந்து இருந்தது,ஆனால் பல வருடம் கழித்து,இதை நான் இங்கு அனுபவித்தேன்,ஒவ்வரு நல்ல படம் துவங்கும் முன்பு திரையரங்கு வாசலில் நீண்ட வரிசை காத்து இருக்கும்,ஒரு மணி நேரம் முன்பு போனால் தான் உட்கார்ந்து படம் பார்க்க முடியும். நிர்வாகம் நமக்காக படங்களை தேர்வு செய்யும் நேர்த்தியும்,தேர்வு செய்யும் நபர்களும்,ஒருங்கிணைப்பும் அருமை,அதனால் நாம் நல்ல படங்களை பார்க்கலாம்,நான் இந்த ஏழு நாட்கள் எத்தனையாயோ படங்களை பார்த்தேன்,அதில் இருந்து சில முக்கியமான படங்களை குறிப்பிடுகிறேன்,அதற்கு முன்பு அங்கு நடந்த ஆரம்ப நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டும்.தங்கள் கலையின் மேல் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி,பரம்பரிய கலை நடனம்,ஒரு கவிஞரின் கவிதைக்கு ஏற்ப நடனம் அமைத்து இருந்தார்கள்,அங்கு இருக்கும் அரசியல் தலைவர்களின் கலை ஆர்வம்,அவர்களின் கவிதை சினிமாவை பற்றிய ஞானம்,அதை பற்றி பேசிய வார்த்தைகள் எல்லம் வியப்பில் ஆழ்த்தியது,இதற்கு எல்லம் மகுடம் சூட்டும் விதமாக உலக புகழ் ஜெர்மனிய இயக்குநர் Werner Herzogயின் தரிசனம்,இந்த ஆண்டுக்குகான வாழ்நாள் சாதனையாளர் விருது,மிகவும் பண்பான மனிதர்,எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை,Klaus Kinskiஐ துப்பாக்கி முனையில் நடிப்பை வாங்கியவர் தான்,ஆனால் அங்கு அவரின் அமைதி,ஒரு சராசரி ரசிகாணிடம் பேசும் விதம்,என்னை வியப்பில் ஆழ்த்தியது,நானும் அவரிடம் பேசினேன்,புகைப்படம் எடுத்தேன்,என் வாழ்வின் முக்கியமான தருணமாக கருதுக்கிறேன்,
சரி நாம் படத்திற்க்கும் வருவோம்.
                  இப்படவிழாவில் என்னை முதலில் இருக்கை நுனிக்கு கொண்டு வந்த படம் அபர்ணா சென்,சமீபத்தில் இயக்கிய The Japanese Wife,உண்மையான காதலை சொல்லும் படம்,எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரியருக்கும்,ஜப்பானியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் முகம் தெரியாமல் அஞ்சல் வழி காதல் தான் கதை,அதை சொல்லி இருக்கும் விதம் அருமை,உண்மையான காதல் என்றும் அழிவது இல்லை என்பது தான் இதன் மூல கதை,அதற்கு சாட்சியாக இயக்குநர் இரண்டு காட்சிகளை வைத்து இருப்பார். கதாநாயகன் வீட்டில் ஒரு விதவை பெண் இருப்பாள்,அவளை விவரிதித்து ஜப்பான் காதலிக்கு கடிதம் அனுப்புவார் கதாநாயகன்,அதில் ஒரு விதவை பெண் அணிந்து இருக்கும் உடை.மற்றும் பாசத்திற்கு ஏற்ப ஒருவர் இறந்த பின்பு அவர்கள் தலை முடியை எடுப்பார்கள் என்றும் கூறி இருப்பார்,இருவரும் அஞ்சல் வழியாக திருமனும் செய்து இருக்கிறார்கள்,15 வருடங்கள் சென்று விட்டது,கதாநாயகன் நோய் வாய் பட்டு இறக்கிறார்,அவளோ புற்று நோய்யல் அவதிப்பட்டு அவரை பார்க்க மொட்டை தலையுடன் மற்றும் வெள்ளை உடையுமாக வருகிறாள்,இந்த இரண்டு காட்சிகள் மட்டுமே போதும் இதன் தன்மையை விவரிக்க.பின்பு ஜெர்மனி படமான when we leave,இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கு ஜெர்மனியில் இருந்து அனுப்பப்பட்ட படம்,ஜெர்மனி வாழ் துருகியர்களின் வாழ்வை சித்தரிக்கும் இப்படம்,உமயேய் என்ற பெண் துருகியில் உள்ள தான் கணவனிடம் சண்டை போட்டு,ஜெர்மனியில் உள்ள தான் பெற்றோர் வீட்டுக்கு வருகிறாள்,அவள் குடும்பம் அவள் மகனை அவன் தந்தையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்கள்,ஆனால் அவள் அதை சம்மதிக்கவில்லை,குடும்பத்தை விட்டு வெளி ஏறுகிறாள்,தனக்கும் தான் மகனுக்கு என்று தனியாக வாழ்க்கையை வாழ்கிறாள்,ஆனால் அவள் மகனுக்காக குடும்ப பசந்திருக்கு ஏங்குவது அதனால் அவள் சந்திக்குக்ம் சவால்கள் தான் கதை. மிக அழகிய படம்,இதில் உமயேய்யக நடிது இருப்பது Sibel kekilli என்ற அற்புத நடிகை,Fathi akinஇன் Head on படத்தில் நடித்வாள்.சமீபத்தில் நடந்து முடிந்த காண்(Cannes) திரைப்பட விழாவில் Palm d'or(golden palm) வாங்கிய தாய்லாண்ட் இயக்குநர் Apichatpong இயக்கிய "Uncle Boonmee Who Can Recall His Past Lives" இவர் சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்தார்,இப்படத்தை திரையிடவும் வந்தார்,அவரின் எளிமையும்,இனிமையான பேச்சும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது,இவர் தான் இந்த விருதை வாங்கினர என்ற சந்தேகம் நாம்குள் எழும்,இந்த படத்தை திரையிடுவதற்கு முன்பு  இந்த படத்தில் நீங்கள் பெருசாக ஏதும் எதிர்பார்க்க வேண்டாம்,சும்மா பாருங்கள்,இதை ஒரு அனுபவமாக ஏற்று கொள்ளுங்கள்,என்று ஒரு அருமையான படம் எடுத்த ஒரு இயக்குநர் தன் படத்தை பற்றி எளிமையாக உரையை முடித்தார்,ஆனால் படம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று,நாம் ஆன்மாவை திரையில் கொண்டு செல்லும் ஒரு தந்திரத்தை Apichatpong கையாண்டு உள்ளார்,கண்டிப்பாகபார்க்க வேண்டிய படம்.பின்பு ஒரு Kazakshatan படமான Daughter in law,இப்படம் வசனம் இல்லாமல் கையாண்டு இருக்கும் ஒரு முயற்சி, ஒரு சராசரி கதை,ஆனால் சில விஷயங்களை வசனம் இல்லாமல் காட்சி வழியாக சொல்லி இருக்கும் நேர்த்தி தான் இப்படத்தின் பெரிய பலம்.அதை போல் Kyrgyzstan படமான The Light thief, Mr light என்று அழைக்கப்படும் ஒரு அப்பாவி மின்சார ஊழியர் மின்சாரத்தை திருடி ஏழை மக்களுக்குக் கொடுப்பார்,அதனால் அவர் சந்திக்கும் வெறுப்புகள் தான் கதை, இப்படத்தில் அரசியல் வழியே இயக்குநர் நம்மை அழைத்து செல்வர்,இப்படத்தை இயக்கிய Aktan abdykaykov,இந்த நாட்டின் முக்கியமான இயக்குநர்.இவர் தான் இதில் Mr light ஆகா நடித்து இருப்பார்.எனக்கு மிகவும் பிடித்த மெக்ஸிகோ(Mexico) இயக்குநர் alejandro gonzález iñárritu இயக்கிய BIUTIFUL,மிக அருமையான ஒரு படைப்பு.Javier bardem யின் நடிப்பு கதைக்கு ஏற்ப ஏற்ப தன்ணை மாற்றி இருக்கும் ஆளுமை,இயக்குனரின் காட்சி அமைப்பு,Gustavo santolaவீண் இசை என்று இப்படம் ஒரு வித்யாசமான ஒரு அனுபவம்.இப்படி எத்தனையோ படங்களை சொல்லிக்கொண்ட போகலாம்,ஒவ்வரு படமும் நமக்கு ஒரு பயணமாகவே அமைகிறது,ஒவ்வரு படமும் வாழ்வின் பல அம்சங்களை எடுத்துயுரைக்கிறது. என் நண்பர்கள் படங்களை பார்க்க தேர்வு செய்யும்போது சில படங்காளை சுட்டிக்காட்டி இது DVDகிடைக்கும் என்று சொல்வார்கள்,DVDயில் பார்ப்பதற்கும் திரையரங்கில் ஆத்மத்தாமன சினிமா ரசிகர்களுடன் பார்ப்பதற்கும் பல வித்யாசங்கள் உள்ளது, எந்த ஒரு முக்கியமான காட்சிக்கும் அவர்கள் கைதட்டுவார்கள் ,அவர்கள் எந்த காட்சிகளை ரசிக்கிறார்கள் என்று நம்மால் உணரமுடியும்,இதனால் நாம் ரசனை தன்மை மாறுபடுகிறது.அதைப்போல் கேரளா மக்களின் கலை ஆர்வத்தை வளர்க்கும் சூழல்,நம்மை பொறாமை பாட வைக்கிறது,ஒவ்வரு திரையாரங்க முன்பு சினிமா சம்மந்தப்பட்ட புத்தக கடைகள் இருக்கும்,உலகின் முக்கியமான திரைப்பட நூல்கள் ஆவ்மொழியில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்,இதன் மூலம் அவர்களின் கலை மேல் உள்ள காதலும் ரசனையும் மாறுபடுகிறது,நல்ல சினிமா உருவாகும் சூழலை அமைத்து இருக்கிறார்கள்,ஆகா மொத்தத்தில் 15ம் கேரளா சர்வதேச திரைப்பட விழா ஒரு அழகிய அனுபவம்,மீண்டும் பயணிப்பேன்.