Some quotes which i Inspired

Film as dream, film as music. No art passes our conscience in the way film does, and goes directly to our feelings, deep down into the dark rooms of our souls.

- Ingmar Bergman



Thursday 19 May 2011

தேசிய விருது பெற்ற ஓவியர் ஜீவானந்தன் சாருக்கு



"நம்மை சுற்றி ஆய கலைகள் 64 இருந்தாலும் ஒரு நூற்றாண்டு கூட வயதாகாத சினிமா இன்று அத்தனை கலைகளையும் புறம் தள்ளிய நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை"
-ஓவியர் ஜீவானந்தன்

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நூலுக்காக தான் "திரைச்சீலை" புத்தகத்திற்கு தேசிய விருது பெற்ற ஜீவானந்தன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம் ,திரைச்சீலை அவரைப்போலவே மிகவும் எளிமையான நடையில் உலக சினிமா,இந்திய சினிமா,இசை,உலக திரைப்பட இயக்குனர்கள் மற்றும் இந்திய திரைப்பட மேதைகள் பற்றி பல தகவல்களை நமக்கு அளிக்கும் ஒரு அருமையான பொக்கிஷம்.குறிப்பாக "The red vilon"(செந்நிற வயலின்) எனும் திரைப்படத்தை பற்றிய கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்று,அதைப்போல் The motor cycle diaries(மோட்டார் சைக்கிள் குறிப்புகள்),வெட்டி எறியப்பட்ட முத்தங்கள்(Cinema paradiso),சிறைக்கு வந்த ரிட்டா ஹோவர்த்(The Shawshank Redemption),குப்பிக்குள் மேனியின் மணம்(The Perfume) போன்ற படங்களுக்கு அவர் எழுதிய விமர்சனம்,வாசிப்பவர்களை அந்த படங்களை பார்க்க வைக்கும் தூண்டும்,"என்னை கவர்த்த ஒரு பகுதி The god The bad The ugly எனும் திரைப்படத்தில் வரும் ஒரு இசையை அவர் நடையில்"ஒரு கழுதைப்புலியின் அலரலைபோல் அரமித்து,ஒரு வாக்கியத்தில் உச்சஸ்தயீயீல் மீண்டும் மீண்டும் ஒழிக்க செய்து டீரம்பட் மழையில் நனையச்செய்யும் ஒரு திகில் ராகமாலிகைகாயை முடியும் இசை பேரருவி"என்று குறிப்பிட்டு இருப்பார்,அதை படித்து முடிக்கும் போது Ennio morriconeயின் அந்த இசை வடிவம் நாம் காதுகளில் ஒலிக்கும் இந்த நூலில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் பல கட்டுரைகள் இந்திய திரைப்படங்களை பற்றியது,குறிப்பாக 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட Shwaas எனும் திரைப்படத்திற்கு மூச்சு எனும் பெயரியில் அவர் எழுதிய கட்டுரை இந்திய சினிமாவும் உலக தரத்தில் இயங்கி கொண்டிருப்பதை நமக்கு உணர்த்துகிறது,திரைப்பட ஆர்வளர்களுக்கு பயனுள்ள நூலை தந்த ஜீவா சாருக்கு நன்றி,மற்றும் தேசிய விருதுக்காக வாழ்த்துகள்

No comments:

Post a Comment